gசென்னை: இரண்டாவது நாளாக 106 டிகிரி பதிவு!

Published On:

| By Balaji

சென்னையில் இரண்டாவது நாளாக இன்று 106 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28ஆம் தேதி நிறைவடைகிறது. கத்திரி வெயிலால் சென்னை, மதுரை, கடலூர், நாகை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய 10 நகரங்களில் நேற்று (மே 19) வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட் அளவு) கடந்தது. இவற்றில் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம் 106.34 டிகிரி மற்றும் சென்னை விமான நிலையம் 106.52 டிகிரி என வெப்பநிலை பதிவானது.

அதை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சென்னையில் வெப்பநிலை 106 டிகிரியை கடந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 107.24 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share