ரிலாக்ஸ் டைம்: ஹெல்த்தி பானகம்!

public

ஆசைக்குக் குளிர்ச்சியான பானங்கள், சுவைக்கு சூடான சூப்புகள் அருந்தினாலும், ஆரோக்கியத்துக்கும் சில பானங்கள் அவசியம். அதற்கு இந்த ஹெல்த்தி பானகம். உதவும்.

**எப்படிச் செய்வது?**

சுக்கு, கடுக்காய், லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை சிறிதளவு எடுத்து வறுத்துப் பொடிக்கவும். ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து அதனுடன் 50 மில்லி கருப்பட்டிக் கரைசல், வறுத்துப் பொடித்த பொடியைச் சேர்க்கவும் (ஒரு ஸ்பூன் போதும்). இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். குடிக்கும் முன் சிறிதளவு புதினா இலைகளைத் தூவி பரிமாறவும்.

**சிறப்பு**

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சோர்வாக இருக்கும் நேரத்தில் இந்தப் பானகத்தை அருந்தினால் உடனடி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.இந்தப் பானம் கோடைக்காலத்தில் பருகுவதற்கும் ஏற்றது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *