விடுமுறை நாட்களில் சோம்பலாக உணரும் தருணங்களில் அடுப்பைப் பற்றவைக்காத, மிக்ஸி உபயோகப்படுத்தாத எளிமையான ஸ்வீட் செய்து சாப்பிட இந்த சத்தான லட்டு உதவும்.
**எப்படிச் செய்வது?**
நன்றாகக் கனிந்த, விதையற்ற பேரீச்சைப்பழங்கள் பத்து, மெலிதாகச் சீவிய முந்திரி, பிஸ்தா தலா இரண்டு டேபிள்ஸ்பூன், மெலிதாக சீவிய பாதாம் ஐந்து டேபிள்ஸ்பூன், மெலிதாகத் துருவிய தேங்காய் அரை கப்… அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு கைகளால் நன்றாகப் பிசைந்து நெய்யைத் தொட்டுக்கொண்டு லட்டுகளாகப் பிடிக்கவும். மிகவும் சுவையான, சத்தான லட்டு தயார்.
**சிறப்பு**
உடனடி புத்துணர்ச்சித்தரும் இந்த ஹெல்த்தி லட்டு அனைவருக்கும் ஏற்றது.�,