தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸின் குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக சுகாதாரத் துறை செயலாளரும் சென்னை மண்டல சிறப்பு கொரோனா தடுப்பு அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கொரோனா தொற்று நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பல்வேறு ஆய்வுப் பணிகள், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கெடுத்து வந்தார்.
ராதாகிருஷ்ணன் தன் மனைவி, மகனோடு சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரின் மாமனார், மாமியார் ஆகியோர் கடந்த வாரம் மதுரையில் இருந்து சென்னை வந்திருக்கிறார்கள். மதுரையில் ஏற்கனவே தொற்று எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் இருந்து சென்னை வந்திருப்பதால் அவர்கள் சோதனை செய்துகொண்டார்கள். கடந்த சனிக்கிழமை அவர்கள் இருவருக்கும், ராதாகிருஷ்ணன் வீட்டின் பணியாளர்கள் இருவருக்கும் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் கிண்டியில் இருக்கும் கிங்க்ஸ் மருத்துவ ஆய்வு நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து சில நாட்களில் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகனுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட அவர்களுக்கும் பாசிட்டிவ் என்றே ரிசல்ட் வர, அவர்களும் கிங்க்ஸ் ஆய்வு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் ஜெ. ராதாகிருஷ்ணன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு இதுவரை செய்யப்பட்ட மூன்று சோதனைகளில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்கிறார்கள்.
**-வேந்தன்**�,