y
விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக எஸ்.அன்பழகனை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், வேலூர் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தில் ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதன்படி, கடந்த மாதம் 27ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்தப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க ஆலோசனை நடத்திவந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
விழுப்புரத்தில் புதிதாகத் தொடங்கப்படுகிற ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு முதல் துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டதற்கான அரசிதழை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த எஸ்.அன்பழகனை துணைவேந்தராக நியமனம் செய்துள்ளது. இவர் மூன்று ஆண்டுகள் வரை துணைவேந்தராகப் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
�,