மெட்ரோவில் ஆறு மாதங்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை!

Published On:

| By Balaji

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஆறு மாதங்களில் பயணம் செய்தோர் விவரத்தை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அரசு தளர்வுகளை அறிவித்ததைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் 21ஆம் தேதி முதல் தொடங்கியது.

அப்போது தொடங்கி கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை ஆறு மாதங்களில் 1 கோடியே 30 லட்சத்து 55,833 பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து கடந்த 30ஆம் தேதி வரை மட்டும் மொத்தம் 29 லட்சத்து 24,148 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். அதிகபட்சமாக கடந்த மாதம் 25ஆம் தேதி 1 லட்சத்து 31 ஆயிரத்து 177 பயணிகள் பயணம் செய்தனர். மேற்கூறிய தகவல்களை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share