இசையால் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடம் பேசப்பட்டுவரும் இளையராஜா சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்.
பாடல்களுக்கான ராயல்டி தொடர்பாக நீண்ட விவாதங்கள் எழுந்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் உள்ளிட்டோருக்கும் இளையராஜாவுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ ஆகியோர் ஜூன் 2ஆம் தேதி சென்னை, ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் நடைபெறும் கச்சேரியில் பாடவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜா சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு நேர்காணல் அளித்தார். அப்போது ரசிகர்கள் தங்கள் நினைவுகளை உங்களது பாடல்கள் வழியே மீட்டெடுக்கின்றனர். 96 திரைப்படத்திலும் அத்தகைய தன்மை வெளிப்பட்டிருந்தது அது பற்றிய தங்கள் கருத்து என்ன என்பதாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த இளையராஜா, “ அதெல்லாம் மிகவும் தவறான விஷயம். ஏதோ ஒரு காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தின் பாடல்களையே பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எங்கு அவர்களால் முடியவில்லையோ, அங்கு புகழ்பெற்ற பாடலைத் திணிக்கிறார்கள். காரணம் என்னவென்றால், அதற்கு ஈடான பாடல்களை அவர்களால் தர முடியாததுதான்” என்று அவர் கூறினார்.
மேலும் அவர் யோதோன் கி பாரத் என்ற இந்திப் படம் ஒன்றை மேற்கோள்காட்டி இருபது ஆண்டுகளுக்கு முன்னுள்ள பாடல் மூலம் குடும்பம் இணைவதைக் காட்டுவதற்காக இசையமைப்பாளரே அந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய பாடலை உருவாக்கியதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இது அவர்களுடைய பலவீனத்தைக் காட்டுகிறது. இது ஆண்மையில்லாத தன்மையாகத்தானே உள்ளது?! ஒரு கதையில் 1980களில் உள்ள பாடல் என்றால் 80களில் வெளியான பாடல்களுக்கு நிகரான பாடலையே இசையமைக்கவேண்டும். ஏன் இசையமைக்க முடியவில்லை? ஜனங்களை என்னுடைய இசையை விட்டுப் பிரிக்கமுடியாது. அதனால் என்னுடைய பாடலை அந்த இடத்தில் பயன்படுத்துகிறார்கள். இது ஆண்மையில்லாத்தனம்” என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
ஒரு காலகட்டத்தை மக்கள் மனதில் விரியச் செய்வதற்கு அந்த காலகட்டத்தின் அடையாளமாக இளையராஜாவின் பாடலை பயன்படுத்துவது அவரை பெருமைப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது. அதற்காக மோசமான வார்த்தைகளை இளையராஜா பயன்படுத்தியிருப்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
.�,”