Hஜி.எஸ்.டி: அரசு கண்காணிப்பு!

public

ஜி.எஸ்.டி நடைமுறையை அரசு தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அதில் ஏற்படும் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதாகவும் மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 2ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ஜி.எஸ்.டியை தொடர்ந்து அரசு கண்காணித்து வருகிறது. அதில் ஏற்படும் பிரச்னைகளும் உடனுக்குடன் தீர்க்கப்படுகிறது. வரி செலுத்துவதில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டது. அவற்றை சரிசெய்யும்படி ஜி.எஸ்.டி நெட்வொர்க்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சரக்குகளின் விலை மீது ஜி.எஸ்.டியால் ஏற்படும் தாக்கத்தையும் அதிகாரிகள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். சுமார் 180 அதிகாரிகள் மற்றும் 30 அமைச்சர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். பல மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டு, தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நடைமுறை சிக்கல்கள் எழும்போது, அவற்றை வரி அதிகாரிகள் சரிசெய்து விடுகின்றனர்” என்று அவர் கூறினார். மேலும், பொருளாதார வளர்ச்சி அடுத்த காலாண்டில் ஏற்றம் அடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *