hஸ்மார்ட்போன்: பட்ஜெட் பிரிவின் சாய்ஸ்!

Published On:

| By Balaji

ஓப்போ நிறுவனம் வெளியிட்ட எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு இமாலய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தற்போது அதன் மற்றொரு ரகமான எஃப்11 ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைலின் முக்கிய அம்சம் என்னவென்றால் அதன் விலைதான். இந்த மொபைலுக்கு ஆரம்பவிலையாக ரூ.17,990 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் பிரிவை கைப்பற்றும் நோக்கில் இந்த மாடலை ஓப்போ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விலை வரம்பில் வேறு எந்த மொபைலிலும் ஓப்போ எஃப்11 போனில் உள்ளதுபோன்ற டிஸ்ப்ளே தரம் இல்லை என்றே கூறலாம்.

இந்த மொபைலில் 6.53 அங்குல full HD தொடுதிரை உள்ளது. Fluorite Purple, Marble Green ஆகிய இரண்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது. ஹார்ட்வேரை பொறுத்தவரை இந்த மொபைலில் மீடியாடெக் ஹீலியோ பி70 பிரசஸார் பொருத்தப்பட்டுள்ளது. இதே பிராசஸார் ஓப்போ எஃப்11 ப்ரோ மாடலிலும் பயன்படுத்தப்பட்டது. 4 GB RAM வசதியோடு 128 GB ROM உடன் வெளிவருகிறது. மேலும் 256 GB வரை கூடுதல் ஸ்டோரேஜ் விரிவாக்கம் செய்துகொள்ளலாம். உயர் ரக கேம்களை கூட தடையின்றி விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4020 mAh திறன் கொண்ட பேட்டரி இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த மொபைலில் உள்ளது. 48 மெகாபிக்சல், 4 மெகாபிக்சல் திறன் கொண்ட டூயல் கேமராக்கள் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளன. 16 மெகாபிக்சல் திறன் கொண்ட செல்ஃபி கேமரா முன்புறம் பொருத்தப்பட்டுள்ளது. டிசைன், லுக் ரீதியாகவும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.15,000 முதல் ரூ.20,000 விலை வரம்பில் சிறந்த ஸ்மார்ட்போனை தேடும் நபர்களுக்கு இந்த மொபைல் நல்ல சாய்ஸாக இருக்கும்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share