புதிய அரசுக்கும் புதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் வேலை உருவாக்கம் மற்றும் முதலீடுகளை உயர்த்துவது போன்றவை கடும் சவாலாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஐந்தாவது ஆலோசனைக் கூட்டத்தை நேற்று (ஜூன் 14) டெல்லியில் நடத்தினார். இக்கூட்டத்தில் சுகாதாரம், கல்வி, சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் மனித வளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. கல்வித் தரத்தை மேம்படுத்துவது, இளைஞர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகளைப் பெருக்குவது, நோய்களைக் குறைப்பது, பெண்களுக்கு அதிகாரமளிப்பது, மனித வளத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் தற்போதைய அரசு உறுதியுடன் இருப்பதாக இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நிதித் துறையினரும், பொருளாதார வல்லுநர்களும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் முதலீடுகளைப் பெருக்குவது போன்றவை நிர்மலா சீதாராமனுக்குக் கடும் சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நிதித் துறை அதிகாரி ஒருவர் *நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்* ஊடகத்திடம் பேசுகையில், “நிதி மேலாண்மை மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது போன்ற அம்சங்கள்தான் பல்வேறு பொருளாதார வல்லுநர்களால் இக்கூட்டத்தின் முதன்மையாகப் பேசப்பட்டது. தனிப்பட்ட நிதிக் குழு அமைப்பதற்கான கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. ஜிஎஸ்டி மற்றும் வங்கி திவால் சட்டத்தை எளிமைப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது” என்றார்.
மேக் இன் இந்தியா திட்டம், வேளாண் துறைக்கான ஏற்றுமதி – இறக்குமதிக் கொள்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. கார்பரேட் வரிச் சீர்திருத்தங்களைக் கையிலெடுப்பது மற்றும் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்களை மேம்படுத்துவது குறித்த நடவடிக்கைகள் தேவை என்று இக்கூட்டத்தில் பங்கேற்ற, முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் வீரமணி கூறியுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**
**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/06/14/17)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
�,”