டீனேஜ்கள் மத்தியில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்று கார்த்தி நடிப்பில் உருவான தேவ் திரைப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிட்டனர். ஆனால், திரைக்கதை சொதப்பலால் அது உருவாக்கப்பட்ட நோக்கத்திலிருந்து தள்ளிச் சென்றது.
படத்தின் மெத்வான நகர்வைத் தாங்க முடியாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கவேண்டிய காதலர் தினத்தில் தூங்கிப்போயினர் படம் பார்க்கச் சென்றவர்கள். அடுத்தடுத்த நாட்களில் வருகைதரும் ஃபேமிலி ஆடியன்ஸால் ‘தேவ் பிழைச்சிடுவார்’ என ரிவ்யூ டாக்டர்கள் சொன்னதற்கு மாறாக, ஐசியு வார்டிலேயே இருந்தார் தேவ். இதற்கு மேலும் பொறுக்கமுடியாது என்று முடிவெடுத்த படக்குழு, திரைப்படத்தின் நீளத்தை 15 நிமிடங்களுக்கு குறைத்துவிட்டனர்.
தேவ் திரைப்படத்தின் முக்கியக் குறையாக அதன் ‘நீளம்’ பலராலும் குறிப்பிடப்பட்டது. நீளம் என்று சொன்னதை, நேரத்தின் அளவுகோலில் எடுத்து வெட்டிவிட முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால், திரைக்கதைக்கு வலு சேர்க்கும் கோர்வையான காட்சிகள் இல்லாததே ரசிகர்களை சோர்வடையச் செய்து, ‘இவ்வளவு நேரமா படம் ஓடுதே’ என்ற அலுப்பை ஏற்படுத்துகிறது என்பதை படக்குழு உணர்ந்தால் நல்லது.
�,”