வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குகள் முழுவதும் எண்ணிய பிறகே விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வாக்கு எண்ணும் தினத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. சத்ய பிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து வருகிறார்.
இந்தநிலையில் இன்று (மே 21) சத்ய பிரதா சாஹூ, “வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு மையத்தில், ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முகவர்களுக்குத் தேவையான அனைத்தும் வாக்கு மையத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் கிடைக்கும். எண்ணிக்கை மையத்தினுள் சில அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்கள் அலைபேசி பயன்படுத்த அனுமதி இல்லை. ஒவ்வொரு சுற்றுக்குப் பின்னும் முடிவுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
”முதலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குகள் எண்ணிய பிறகே விவிபாட் எனப்படும் ஒப்புகை சீட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 விவிபாட் இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். பின்னர் அவை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகி வாக்குகள் எண்ண முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கான விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகைச் சீட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வாக்கு எண்ணும் பணி குறித்து காணொலிக் காட்சி மூலம், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, நாளை காலை 11.30 மணிக்கு மாநிலத் தேர்தல் அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். மேலும் மே 23ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)
**
.
**
[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/56)
**
.
**
[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
.
�,”