hலஞ்சம் வாங்கிய மூன்று அதிகாரிகள் கைது!

public

இன்றைய காலத்தில் ஆதி முதல் அந்தம் வரை லஞ்சம் இல்லாமல் எந்தக் காரியமும் நடப்பதில்லை. லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம் எனத் தெரிந்தும், சட்டத்துக்கு அஞ்சாமல் வாங்குகின்றனர். இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் பட்டா வழங்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார், கோட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பரங்கிமலையைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர், நந்தம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்காக மறுவரையறை செய்ய ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் சரியாக இருந்தும், ஆலந்தூர் தாசில்தார் தனசேகரன், வருவாய் ஆய்வாளர் முத்தழகன், தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர், நிலத்துக்குப் பட்டா வழங்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த மோகனசுந்தரம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் அளித்த அறிவுரையின்பேரில், அவர் அதிகாரிகளுக்கு ஒரு லட்சத்தை லஞ்சமாக வழங்கியுள்ளார். இதை மறைந்து பார்த்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மூன்று பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, நீதிபதி தேவநாதன் உத்தரவின் பேரில் மூன்று பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *