பாஜக மீண்டும் மத்தியில் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்கும் நிலையில், இன்று (மே 27) ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், ‘ராமருக்கான பணிகள் முடிக்கப்பட வேண்டும், முடிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசிய தகவலை ஏஎன்ஐ செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கிறது.
“ராமருக்காகச் செய்து முடிக்க வேண்டிய பணிகளைச் செய்தாக வேண்டும். இல்லையெனில் விரைவில் செய்யப்படும். அந்த பணியை வேறு யாரிடமாவது நாம் ஒப்படைத்தால், அவர் அதைச் செய்கிறாரா என்று நாம் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். நாமே செய்ய வேண்டும் என்று இருந்தால் அதை நாமே செய்ய வேண்டும்” என்று பேசியிருக்கிறார் மோகன் பாகவத்.
அயோத்தி ராமர் கோயில் பற்றிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர்களின் குழுவின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மோடி அரசு இரண்டாம் முறையாகப் பதவியேற்க இருக்கும் நேரத்தில் மோகன் பகவத் இவ்வாறு பேசியிருக்கிறார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
.�,”