hராணுவ பலத்தை மேம்படுத்த புதிய திட்டம்!

Published On:

| By Balaji

‘போருமில்லை சமாதானமில்லை’ என்ற நிலை இந்தியாவில் நிலவி வருவதாக, 2018ஆம் ஆண்டுக்கான ராணுவத்திற்கான புதிய தரை தாக்குதல் கோட்பாடு தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளின் ராணுவத் தாக்குதலைச் சமாளிக்கவும், தற்காத்துக் கொள்ளவும் புதிய தொழில்நுட்பங்கள், ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் போன்றவற்றைப் புகுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இந்திய எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனப் படைகளின் தாக்குதலும், பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி நடத்தும் எல்லை தாக்குதலும் தொடர்ந்து நீடித்த வண்ணம் உள்ளது.

இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளைச் சமாளிக்கவும், அணு ஆயுத மிரட்டல்களை எதிர்கொள்ளவும் புதிய போர் யுக்திகளைக் கையாளவுள்ளது இந்திய ராணுவம். அதனால், மனித-இயந்திரங்கள் இணைந்த குழுவைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் திறன், ரோபோ, மைக்ரோ செயற்கைக்கோள் போன்ற தொழில்நுட்பங்கள் இதில் உட்புகுத்தப்படுகின்றன. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்” போன்ற பயனுள்ள நடவடிக்கைகளை இந்திய ராணுவம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தேவையின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட தொழில்நுட்பங்கள் படிப்படியாக ராணுவத்தில் சேர்க்கப்படும் எனவும் அந்த கோட்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share