Hமோடி-ஜெகன்மோகன் சந்திப்பு!

Published On:

| By Balaji

ஆந்திர மாநிலத்தின் சட்டமன்றத் தேர்வுகள் முடிந்து மே 23ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 175 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளை பெற்று படுதோல்வியடைந்துள்ளது. இதையடுத்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆந்திராவின் புதிய முதல்வராக மே 30ஆம் தேதியன்று ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல், ஆந்திர மாநிலத்தின் 25 மக்களவைத் தொகுதிகளில் 22 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். தெலுங்கு தேசம் கட்சி வெறும் 3 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. தேர்தல் வெற்றிக்குபின் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படும் வரை விடப்போவதில்லை எனவும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.

நேற்று (மே 25) ஹைதராபாத்தில் ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்து தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார். இருவரும் ஆந்திராவுக்கும், தெலங்கானாவுக்கும் இடையேயான விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர்.

இந்நிலையில் இன்று (மே 26) பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டு சென்றார் ஜெகன்மோகன் ரெட்டி. அவருடன் விஜய சாய் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர். மோடியின் இல்லத்தில் அவருக்கு மலர்க்கொத்து வழங்கி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஜெகன்மோகன். பின்னர் இருவரும் ஆந்திரம் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு ஜெகன்மோகன் டெல்லியிலுள்ள ஆந்திர பவனுக்கு புறப்படுகிறார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!](https://minnambalam.com/k/2019/05/25/81)

**

.

**

[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)

**

.

**

[மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?](https://minnambalam.com/k/2019/05/225/55)

**

.

.

**

[மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?](https://minnambalam.com/k/2019/05/25/25)

**

.

**

[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)

**

.

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share