தினப்பெட்டகம் – 10 (22.11.2018)
தென்கொரியா பற்றிய முக்கியத் தகவல்கள்…
1. கொரியாவில் குழந்தைகள் பிறந்ததும் ஒரு வயது என்று கணக்கில் கொள்ளப்படும்.
2. தென்கொரியாவில் மக்கள்தொகையில் ஏறத்தாழ 3.2% மக்கள் மட்டுமே அதிக உடல் எடை கொண்டவர்கள். இது உலகிலேயே மிகக் குறைவான அளவு.
3. தென்கொரிய ஆண்களுக்கு மேக்அப் மீது அதிக ஈடுபாடு உள்ளதாம். ஏறத்தாழ 20% ஆண்கள், மேக்அப் அணிந்து கொள்வார்களாம்
4. தென்கொரியாவில் பொது இடங்களில் மது அருந்துவது குற்றமல்ல.
5. தென்கொரிய நாட்டைச் சேர்ந்த நபரின் பெயரை சிவப்பு மையில் எழுதினால், அவர் இறக்கப் போகிறார் அல்லது ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று பொருள்.
6. தென்கொரிய நாட்டில், நான்கு என்ற எண் அதிர்ஷ்டமில்லாததாம்.
7. தென்கொரிய பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கிறார்கள்.
8. தென்கொரியர்களுக்கு சீனிக்கிழங்கு மிக மிகப் பிடித்தமான உணவு. சீனிக் கிழங்கில் சிப்ஸ், ஐஸ்க்ரீம், பிட்சா, இனிப்பு வகைகள், காபி என அனைத்துமே அங்கு கிடைக்கும்.
9. தென்கொரியாவில் திருமண உடைகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலேயே இருக்கும்.
10. தென்கொரியர்களுக்கு ஷாப்பிங் செல்வது மிகப் பிடித்தமான பொழுதுபோக்கு. காலை 4 மணி வரைக்கும் கடைகள் திறந்திருக்குமாம்!
**- ஆஸிஃபா**�,