hமன்றோவுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

பாஜகக்காரங்க பத்மாவத் படத்துக்கும் பாகமதி படத்துக்கும் வித்தியாசம் தெரியாம தியேட்டர்ல போயி பிரச்சினை பண்ணுனதை பாத்தோம். அடுத்து கட்சியில உள்ள பிரியங்கா திரிவேதியை மென்சன் பண்றதுக்குப் பதிலாக நடிகை பிரியங்கா சோப்ராவை ட்விட்டர்ல மென்சன் பண்ணி பல்ப் வாங்குன காங்கிரஸையும் பாத்தோம். இப்போ அந்த மேட்டர்ல புதுசா தமிழ்நாடு போலீஸே இணைஞ்சிருக்கு. ஆமாங்க, ஆமா. பல வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு பழைய கேஸ்ல வைகோமேல வழக்குப்பதிவு செஞ்சிருக்காங்க.

இப்ப அந்த கேஸோட குற்றப்பத்திரிகை நகலை கோர்ட்ல தாக்கல் செஞ்சிருக்கார் வைகோ. இப்ப அதைப் பார்க்குறப்போதான் புதுசா ஒரு மேட்டர் சிக்கிருக்குது. அதாவது அந்த நகல்ல,அண்ணா சாலையில உள்ள மர்லின் மன்றோ சிலைக்குப் பக்கத்துல பாதுகாப்பு பணியில இருந்ததாக ஒரு குறிப்பைச் சொல்லிருக்குறாரு போலீஸ்காரர். இதுல என்ன பிரச்சினைன்னு கேக்குறீங்களா, அதான் பிரச்சினையே. ஏன்னா அவங்க சொன்ன அந்த ஏரியாவுல இருக்குறது மர்லின் மன்றோ சிலை இல்ல, ஆக்சுவலாக அங்க இருக்குறது மெட்ராஸ் மாகாணத்தின் முன்னாள் கவர்னர் தாமஸ் மன்றோவோட சிலை. தாமஸ் மன்றோனு சொல்றதுக்குப் பதிலாதான் அமெரிக்க நடிகையான மர்லின் மன்றோவோட சிலையின்னு தப்பா சொல்லியிருக்குறாங்க.

என்னத்த சொல்ல, நீங்க கீழே அப்டேட்ஸைலாம் படிங்க!

**@Thaadikkaran**

குழந்தைகளுக்கு கதை சொல்ல கதை தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, பொய் சொல்ல தெரிந்தால் போதும்..!

**@hiphopkarthi24**

திங்கள் கிழமை காலை கிட்டத்தட்ட எல்லாருமே எல்.கே.ஜி.குழந்தையின் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்

**@Arjundreams43**

குழந்தைகள் இருந்தும் இல்லாத, இல்லங்களாய் மாறிவிட்டது.

எந்த கிறுக்கல் சுவடுகளும்

ஒன்டவிடாத டைல்ஸ் ஒட்டிய வீடுகள்.

**@BlackLightOfl**

கைதடியோடு நடக்கும் கிழவன்

முந்தி செல்கிறான்,

மொபைல் போனும் நடக்கும் இளைஞனை..!!

**@MJ_twets**

இன்னைக்கு சென்னையில சுத்திக்கிட்டு இருக்க பாதி பேர் தன்னைச் சார்ந்து இருக்கவங்கள காப்பாத்தனும்னு வந்துட்டு தன்னையே காப்பாத்த முடியாம சுத்திக்கிட்டு இருக்கவங்க தான்.,!

**@Kiruthiga1207**

மோகனூர் ஆற்று பாலத்தில் 4 வயது குழந்தையை பாலத்தின் திட்டில் வைத்து செல்ஃபி எடுக்கும் போது குழந்தை ஆற்றில் விழுந்து இறப்பு..

கேட்கும் போதே பதற வைக்கும் செய்தி..

செல்ஃபி மோகம் ஆபத்திற்கு வழிகாட்டுகிறது பல நேரங்களில்..

**@divakarantmr**

தவறுகளை கண்டும் காணாது, நமக்கென்ன என செல்லும் ஒவ்வொரு சமயமும் மறைமுகமாய் ஏதோ ஓர் அநீதிக்கு உதவி கொண்டிருக்கிறோம் நாம் அனைவரும்.!

#விழிப்போம்

**@Akku_Twitz**

“வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால்,

விரல்கள் இரட்டை இலைக்கே

போகும்” – அமைச்சர் செல்லூர் ராஜூ

காத்தடிச்சதும் தெர்மாகோல் பறந்து போச்சே அப்டியாணே?

**@mujib989898**

மறைமுகமாக தாக்க மறைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

கூடவே இருந்து சிரித்து கொண்டே காரியத்தை சாதித்து விடலாம் என நினைத்து விடுகிறார்கள்

**@gowrisa28263028**

எப்போதும்

கடலை

பார்த்துக்

கொண்டிருப்பதாலோ

என்னவோ!!

மீனவனின்

உள்ளம்

பரந்துவிரிந்து

இருக்கிறது.

#தமிழகம்கேரளம்

**@mohanramko**

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எல்லாவற்றையும் மாற்றி காட்டிவோம் என்று சொன்னவர்கள், சொன்னபடியே மாற்றி காட்டினார்கள் போட்டோ ஷாப் மூலம்….

**@ajmalnks**

பண்டிகை தினத்தன்று அணியும் புத்தாடையை அழுக்கு படாமல் பாதுகாப்பது என்பது பெரிய விஷயமாகவே இருக்கிறது.

**@sThivagaran**

பாசமாய் தான்

உரசிச் சென்றிருக்கும்

காற்று..

புழுதி கிளப்பியது

தெருவின் தவறு..!

**@Thaadikkaran**

நாமே என்ன செய்தாலும் நானும் செய்யுறேன்னு முன்னே வந்து வான்டடா வந்து உட்காருறே குழந்தை, சாப்பிட போகும்போது கையு மட்டும் வேலை பார்க்கும் வாயி அப்டியே இருக்கும்..!

– லாக் ஆஃப்!�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share