ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மணல் புயல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 4) தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலகளில் மே 2ஆம் தேதியிலிருந்து மணல் புயல் தாக்க ஆரம்பித்தது. இந்தப் புயலால் பெரும்பாலான மின் கம்பங்கள், மரங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
இந்தப் புயலுக்கு 127 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 62 பேரும், ஆக்ராவில் 43 பேரும் ராஜஸ்தானில் 31 பேரும் உயிரிழந்துள்ளனர். 150 பேர் படுகாயமடைந்துள்ளனர். 1,400க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் இல்லை.
உத்தரப் பிரதேசம், ஒடிசா, பிகார், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களுக்கு பலத்த மழை, புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து மணல் புயலினால் உயிரிழந்தோர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.�,