hபேச்சுவார்த்தை காலம் கடந்த செயல்: மோடி

Published On:

| By Balaji

பயங்கரவாதத்துக்கு எதிரான பேச்சுவார்த்தை, காலம் கடந்த செயல் என்பதை புல்வாமா தாக்குதல் காட்டுகிறது. எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 18) தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா அதிபர் மௌரிஷியோ மேக்ரி மூன்று நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் மோடியும் அர்ஜென்டினா அதிபரும் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து இருவரும் இன்று (பிப்ரவரி 18) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ”உலக நாடுகள் ஒன்றுபட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். உலக அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை நானும், அர்ஜென்டினா அதிபரும் முடிவு செய்துள்ளோம். எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக பேச்சுவார்த்தையின் மூலம் இனியும் தீர்வு காண்பது காலம் கடந்த செயல் என்பதை புல்வாமா தாக்குதல் காட்டியிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். நடவடிக்கை எடுக்க தயங்குவது என்பது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கு சமம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்பு, உள்நாட்டு அணுசக்தி, சுற்றுலா, மருத்துவம் மற்றும் வேளாண்மை உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே பத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாவும் தெரிவித்தார். மோடியைத் தொடர்ந்து பேசிய அர்ஜென்டினா அதிபர், புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று குறிப்பிட்டார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share