டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கு, பிரதமர் மோடியின் பெயரை வைக்க வேண்டுமென பாஜக எம்.பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் (ஜேஎன்யு) கடந்த 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிலையில் பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத்தின் சார்பில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று (ஆகஸ்ட் 17) நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
அதில் டெல்லி வடமேற்கு தொகுதி பாஜக எம்.பியும் பாடகருமான ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “இனிவரும் காலங்களில் காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் என்றுதான் அனைவரும் பிரார்த்திக்கிறார்கள். நம் முன்னோர்கள் செய்த தவறுக்காக நாம் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்று விமர்சித்தார்.
மேலும் பார்வையாளர்களை நோக்கி, ஜேஎன்யுவிலுள்ள ‘ஜே’ இனி எதற்காக என்று கேள்வி எழுப்பிய ஹன்ஸ் ராஜ், “நான் இப்போதுதான் முதல்முறையாக ஜேஎன்யுவிற்கு வந்துள்ளேன். ஆனால் பல்கலைக் கழகம் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். மோடி அரசாங்கத்தின் முயற்சியால் இங்கு நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது.
மோடி தேச நலன்களுக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளார். ஆகவே ஜேஎன்யுவை எம்என்யு பல்கலைக் கழகமாக மாற்ற வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் என்பதை மோடி நரேந்திர பல்கலைக் கழகம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஏனெனில் பிரதமர் மோடி பெயரில் இங்கு ஏதாவது இருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[பிக் பாஸ் 3: மதுமிதாவைச் சுற்றி நடந்தது என்ன?](https://minnambalam.com/k/2019/08/118/18)**
**[ஆந்திரா பாணியில் துணை முதல்வர்கள்: எடப்பாடிக்கு புதிய நெருக்கடி!](https://minnambalam.com/k/2019/08/18/15)**
**[கோமாளி: என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க?](https://minnambalam.com/k/2019/08/18/8)**
**[மோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்சரிக்கை!](https://minnambalam.com/k/2019/08/17/18)**
**[உடலுறவு இல்லாமல் “உறவு” சாத்தியமில்லையா?](https://minnambalam.com/k/2019/08/17/11)**
�,”