தமிழ்க் கதாநாயகர்கள் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் கட்சி தொடங்குகிறார்கள் என்று விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற தனது ஆசையைத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோன்ஸும் நீண்ட நாள்களாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் காதலர்களாக வலம் வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர்களது திருமணம் நடைபெற்றது. சர்வதேச கவனம் பெற்றுள்ள இருவரும் தங்கள் திருமணத்தைக் கோலாகலமாக நடத்தினர். திருமணக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். விவசாயிகளைச் சந்திக்காத பிரதமர், நடிகையின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்ற விமர்சனங்களும் அப்போது எழுந்தன.
பிரியங்கா சமீபத்தில் சன்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், “நான் இந்தியாவின் பிரதமராக ஆசைப்படுகிறேன். என் கணவர் அமெரிக்காவின் அதிபராக வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இருவருக்குமான அரசியல் பார்வை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இருவரும் மாற்றத்தை விரும்புபவர்கள் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். நிக் ஜோன்ஸ் நல்ல தலைவராக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் பிரியங்காவும் நிக் ஜோன்ஸும் பிரியவுள்ளதாக ஹாலிவுட் வட்டாரத்தில் வதந்தி பரவியது. இந்த நிலையில் தனது கணவர் குறித்து, “பெண்ணியவாதி என்ற வார்த்தையைப் பயன்படுத்த அவர் தயங்காதவர். அதனாலே எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். மிகவும் புத்திசாலியான நபர். என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொள்ளக் கூடியவர். பிடித்ததைப் பிடித்த நேரத்தில் செய்யக்கூடியவள் நான். எனக்கு முழு உறுதுணையாக இருக்கக் கூடியவர் நிக்” என்று கூறியுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**
[டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின் செல்போன் ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/04/68)
**
**
[செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!](https://minnambalam.com/k/2019/06/04/66)
**
**
[ஆட்சிக் கவிழ்ப்பு: மத்திய அரசின் உதவியை நாடும் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/04/25)
**
**
[2.0: சீனாவில் பிரம்மாண்ட ஓப்பனிங்!](https://minnambalam.com/k/2019/06/03/49)
**
**
[இளையராஜா 76: சுவாரஸ்யமான தருணங்கள்!](https://minnambalam.com/k/2019/06/03/37)
**
�,”