Hநிலக்கரி இறக்குமதி உயர்வு!

Published On:

| By Balaji

இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் நிலக்கரி இறக்குமதி 12 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த நிதியாண்டின் (2018-19) முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 78.7 மில்லியன் டன்னாக உள்ளது. இது முந்தைய ஆண்டு ஏற்றுமதியைக் காட்டிலும் 11.9 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் 70.3 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 42 விழுக்காடு அதிகரித்து 20.79 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 16.64 மில்லியன் டன் நிலக்கரி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து எம்ஜே.ஜங்சன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினய வர்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் நிலக்கரி மற்றும் கற்கரி இறக்குமதி 78.79 மில்லியன் டன்னாக உள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 70.33 மில்லியன் டன்னை விட 12 விழுக்காடு அதிகமாகும். மின் ஆலைகளுக்கு ஏற்பட்ட நிலக்கரி தட்டுப்பாட்டின் காரணமாக இறக்குமதி அதிகரித்துள்ளது. அதேபோல வெளிநாட்டு விலையும் முக்கியக் காரணமாக உள்ளது” என்றார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share