சென்னையில் தொழிலதிபரைத் தாக்கி 1 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் ரவுடி ஜான்சன் இளங்கோவைக் கைது செய்துள்ளனர் போலீசார்.
சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் முகமது தாஹிர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரை, சமீபத்தில் ராமகிருஷ்ண, ராஜதுரை ஆகிய இருவரும் அணுகினர். போரூர் அருகேயுள்ள 110 ஏக்கர் புறம்போக்கு நிலத்துக்கு பட்டா ஏற்பாடு செய்து தருவதாக அவர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார் முகமது தாஹிர், இதன்படி, இருவரும் சேர்ந்து முகமது தாஹிரிடம் ஒன்றரை கோடி ரூபாய் அளித்துள்ளனர். ஆனால், சொன்னபடி பட்டாவை வாங்கித் தரவில்லை தாஹிர்.
இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் இளங்கோ என்பவர் வரவழைக்கப்பட்டார். அவர் நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி என்று கூறப்படுகிறது. ஜான் இளங்கோவுடன் 3 பேர் சென்னை வந்தனர். துரைப்பாக்கம் பகுதியில் நடந்த பேச்சுவார்த்தையின்போது முகமது தாஹிர் தாக்கப்பட்டார். அவரை ஒரு அறையில் அடைத்த ஜான் இளங்கோ கும்பல், அவரது மனைவியை செல்போனில் அழைத்து மிரட்டியது. அவரிடம் இருந்து 1 கோடி ரூபாய் பணத்தை வாங்கியது.
இதையடுத்து, துரைப்பாக்கம் போலீசாரிடம் புகார் செய்தார் முகமது தாஹிர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கோவையில் பதுங்கியிருந்த ஜான் இளங்கோவைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மீதிப் பணம் தனது கூட்டாளிகளிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர்களைத் தேடி மீதமுள்ள பணத்தைத் தேடும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஜான் இளங்கோ ஆலந்தூர் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரைச் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)
**
.
.
�,”