hதேவை நடமாடும் டாஸ்மாக் கடைகள்: தனியரசு

Published On:

| By Balaji

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் தனியரசு வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளையும் முடினார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அது கிடப்பில் போடப்பட்டது.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை இருந்துவரும் சூழலில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளார் காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனியரசு.

நேற்று (ஜூலை 13) வேளாண் துறை மீதான மானியக் கோரிக்கையின் மீது பேசிய அவர், “மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அந்த காலத்தில் புதுப் படங்களுக்கு டிக்கெட் வாங்குவது எவ்வளவு கடினமோ அதுபோலவே ஒரு பாட்டிலை வாங்குவதற்கு நேரமாகிறது. மேலும் கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share