மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையில், மாணவர்களின் கல்விக் கடன்கள், விவசாயக் கடன்கள் தள்ளுபடி, விவசாயிகள் கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் 5 (சவரன்) பவுன் வரையில் ரூ 75 ஆயிரத்துக்கு அடகு வைத்திருந்தால் அதைத் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.
இதனை ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் அழுத்தம் திருத்தமாக எடுத்துச்சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின், மத்தியில் அடுத்து வரப்போவது காங்கிரஸ் ஆட்சிதான், ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும், அதன் பிறகு வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார்.
வாங்கிய வங்கிக் கடன்களைத் திரும்பச் செலுத்த இருந்த விவசாயிகளும், கல்விக் கடன் வாங்கிய மாணவர்களின் பெற்றோர்களும் ஆட்சி மாறும் என்ற உறுதியான நம்பிக்கையில் கடனையும், வட்டியும் செலுத்தாமல் காத்திருந்தனர். மேலும், தேர்தலுக்குப் பிறகு நகைக் கடனை தள்ளுபடி செய்வார்கள் என்ற நம்பிக்கையில். பலரும் அடகுவைத்த நகைகளை மீட்காமல் காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியது திமுக கூட்டணி. ஆனால், அதற்கு நேர்மாறாக இந்திய அளவில் அதிக இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சியைப் பிடித்தது. இடைத் தேர்தலில் ஒன்பது எம்.எல்.ஏ.க்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது அதிமுக.
இதனால் கூட்டுறவு, தேசிய வங்கிகளில் வைத்துள்ள நகைகளை அடகு வைத்திருந்தவர்கள் திரும்ப மீட்டு வருகிறார்கள். மேலும், நிலுவையில் இருந்த கல்விக் கடனுக்கு வட்டியைக் குறையுங்கள், ஒரே தவணையாகவே திரும்பச் செலுத்திவிடுகிறோம் என்று பல பெற்றோர் வங்கி மேலாளர்களிடம் போராடிவருகிறார்கள் என்று கூறுகிறார்கள் வங்கி ஊழியர்கள்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
.
�,”