hதிருச்சி: தொடரும் பிளாஸ்டிக் பயன்பாடு!

Published On:

| By Balaji

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி தெருவோர வியாபாரிகள் பாலித்தீன் பைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தமிழக அரசு தடை விதித்திருந்தது. அதன் பின்னர் மே 20ஆம் தேதி வரையில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 10 டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக ரூ.5.75 லட்சம் வரையில் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னமும் தெருவோர விற்பனையாளர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

திருச்சியில் பெரும்பாலான கடைகளில் பாலித்தீன் பைகளுக்குப் பதிலாகத் துணிப் பைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இருப்பினும் பூக்கடைகள், சாலையோரத் தள்ளுவண்டி உணவகங்கள் போன்ற சிறு கடைகளில் பாலித்தீன் பயன்பாடு உள்ளது. திருச்சி மண்டல கார்பரேஷன் அலுவலகத்துக்குப் பின்னால் உள்ள பொன்மாலை மலர் சந்தையில் பாலித்தீன் பைகள் அதிகமாகக் கிடைப்பதாகவும் அவற்றைத் தடை செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்லுகுழி பகுதி மக்கள் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)

**

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share