hதினகரன் அதிமுகவில் இல்லை : பன்னீர் அணி!

public

தினகரன் என்பவர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர், அவர் அதிமுகவிலேயே இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் அதிமுக-வின் நிலைமை உச்சகட்ட குழப்பத்தில் உள்ளது. அமைச்சர்களுக்கு, தினகரன் விடுத்த கெடு முடிந்ததால் புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று வெளியிட்டார். இதற்கு அமைச்சர்கள்,’ அதிமுக பொதுச்செயலாளர் பதவியே தேர்தல் ஆணையத்தால் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. எனவே தினகரனால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் நியமனமும் கேள்விக்குறிதான்’ என்று தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசை எதிர்த்து சென்னையில் வரும் 10ஆம் தேதி பன்னீர்செல்வம் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று (ஆகஸ்ட்-5) நடைபெற்றது. ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி,’ தமிழகம் முழுவதும் டெங்கு வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் வரும் 10 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையிடம் முறையாக அனுமதி கோரியுள்ளோம். புதிய நிர்வாகிகளை தினகரன் அறிவித்துள்ளதால் எங்கள் அணியில் எந்த குழப்பமும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை தினகரன் என்பவர் அதிமுகவிலேயே இல்லாதவர். கட்சியிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர்தான் இந்த தினகரன். இதனால் தினகரனின் அரசியல் செயல்பாடுகள் குறித்து நாங்கள் கவலை கொள்ளவில்லை.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சுகாதாரத்துறை அமைச்சர் தன்னுடைய பதவியிலிருந்து விலகி, குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அவர் பதவியிலிருந்து விலகுவதுதான் அவருக்கும், கட்சிக்கும் நல்லது. போராட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் வலியுறுத்தவுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0