கணவன் மனைவிக்குள் பிரச்னை என்றால் அவர்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்வதுதான் சரியான முறை. அதைவிடுத்து சிறிய கருத்துக்கெல்லாம் விவாகரத்து என்று நீதிமன்றம் சென்றால் என்ன விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று கணவருக்கு வழக்கறிஞர் விளக்கி சொல்ல விவகாரத்தே வேண்டாம் என்று ஜகா வாங்கியிருக்கிறார். பிரச்சனைகளோடு வந்த கணவருக்கும், வழக்கறிஞருக்கும் நடந்த உரையாடலே சுவாரஸ்யமாக இருந்திருக்கிறது. விவகாரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்யச் சென்ற இளைஞருடன் வழக்கறிஞர் அவருடைய மாத வருமாணம், கையிருப்புப் பணம் போன்றவற்றையெல்லாம் விசாரித்து விட்டு அந்த கணவரிடம் , விவாகரத்து செய்வதற்கான ஆயத்தங்களை விளக்கி சொல்லியிக்கிறார்.
நீ விவகாரத்துப் பெறும் வரை மாதந்தோறும் 3,400 டாலர்கள் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வீட்டு வாடகைக்கு, உணவு உடைக்கு எனக் கொடுக்க வேண்டும். விவகாரத்துப் பெற ஒன்றரை வருடங்கள் எடுக்கலாம். அதுவரை நீங்கள் இந்த தொகையை தொடர்ந்து தந்தாக வேண்டும். விவகாரத்துப் பெற்ற பிறகு குழந்தைகள் பராமரிப்பு பணமாக மாதம் தவறாமல் 1,800 டாலர்கள் கொடுக்க வேண்டும். உங்களது முன்னாள் மனைவி விவாகரத்துப் பெற்ற பிறகும் வேலைக்குச் செல்லாவிட்டால் இதை விட அதிகமான தொகையை ஜீவனாம்சமாக செலுத்த வேண்டியிருக்கும். உங்களது மூன்று குழந்தைகளுக்கும் 18 வயது வரும் வரை நீங்கள் இந்த பராமரிப்பு பணத்தைக் கொடுக்க வேண்டும். ஆனால் நீங்களோ 2000 டாலர்கள் கூட மாத வருமானமாக பெறவில்லையே? விவாகரத்து செய்துதான் ஆகா வேண்டுமா ?என்பதை நன்றாக யோசித்து கூறும்படி சொல்லியிருக்கிறார். கொஞ்சம் பதட்டம் அவருக்குள் ஏற்பட்டிருந்தாலும் அதை வெளிகாட்டிகொள்ளாமல் ‘வீட்டின் மேல் கடன்பெற்றுத் தன்னால் தற்காலிகமாக நிலைமையைச் சமாளிக்க முடியும்’ எனக் கூறியபோது வீட்டின் அரைப்பகுதிப் பெறுமானம் உங்கள் மனைவிக்குரியது. அவரது அனுமதியில்லாமல் நீங்கள் அடமானமோ, கடனோ பெறமுடியாது என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட அரண்டு போனவர் இனி ரிஸ்க்கே வேண்டாம் என்று மறு யோசனையில்லாமல் மனைவியின் வீட்டிற்குச் சென்று தான் செய்த தவறை மன்னிக்குமாறு நேரடியாக மனைவியிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனைவியை அழைத்து வந்து அமைதியாகக் குடும்பம் நடத்திவருகிறார். அவரது நண்பர்களையும் வீட்டில் எந்த பிரச்னை என்றாலும் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். விவகாரத்து என்று நீதிமன்றம் மட்டும் சென்றுவிடாதீர்கள் என்று அறிவுரை சொல்லி வருகிறாராம்.�,