சென்னை பெருநகராட்சி மற்றும் போக்குவரத்துக் காவல் துறை இணைந்து 2,400 கைவிடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யவுள்ளன.
சாலையோரங்களிலும் தெருக்களிலும் கைவிடப்பட்ட அல்லது இடையூறாக இருக்கும் வாகனங்கள் போக்குவரத்து காவல் துறையால் கைப்பற்றப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. பின்னர் அவை விற்பனை செய்யப்படுகின்றன. சென்ற ஆண்டில் மட்டும் சுமார் 7,800 வாகனங்கள் இவ்வாறாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. அந்த வகையில் அடுத்த சில வாரங்களுக்குள் 2,480 கைவிடப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 2,400 வாகனங்கள் இருசக்கர வாகனங்களாகும்.
இதுகுறித்து சென்னை பெருநகராட்சி அதிகாரி ஒருவர் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், “கைவிடப்பட்டு கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை விற்பனை செய்வதால் சென்னை பெருநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல் துறை இரண்டுக்குமே பயன் ஏற்படும். சென்ற ஆண்டில் 7,900 வாகனங்கள் ரூ.2.21 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் 7,683 வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் ஆகும். கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டால்தான் அதிக தொகை கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/24/93)
**
.
**
[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)
**
.
**
[மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?](https://minnambalam.com/k/2019/05/225/55)
**
.
**
[மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?](https://minnambalam.com/k/2019/05/25/25)
**
.
**
[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)
**
.
.
�,”