hசிறப்புக் கட்டுரை: போராட்டம் வெற்றியா?

Published On:

| By Balaji

கேபிள் சங்கர்

தமிழ் சினிமா உலகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு இரண்டு மாதங்கள் போராட்டம் நடத்தினார்கள். டிஜிட்டல் சர்வீஸ் ப்ரொவைடர்களை எதிர்த்தும், ஆன்லைன் டிக்கெட் கொள்ளையைத் தடுக்கவும். பைரஸியை ஒழிக்கவும் எனப் பல கோரிக்கைகள். நான்கைந்து பேருடன் ஒப்பந்தம் போட்ட போட்டோ போட்டதோடு சரி. ஒரு சில நிறுவனங்கள் கையெழுத்தானதும், தனியே இயங்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், இன்றளவில் போராட்டம் எதற்கு நடத்தினார்களோ, அது வெற்றியா என்று கேட்டால் அதற்குப் பதிலே கிடைக்கவில்லை.

விலையைக் குறைத்துவிட்டோம் என்று சொல்லப்பட்ட ஒன்கே புரொஜக்‌ஷன் விலையை 5,000 ஆக்கிவிட்டோம் என்றார்கள். ஆம், உண்மைதான். விலை குறைந்துதான்விட்டது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஒன்கே புரொஜக்‌ஷன் தியேட்டர்களே விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் இருக்கின்றன. ஆனால், டூகே புரொஜக்‌ஷனுக்கு விலை சற்றே அதிகப்படுத்திவிட்டார்கள். இன்னொரு காமெடி என்னவென்றால் முன்பே போராட்டம் இல்லாமல் ஒப்புக்கொண்ட ஆந்திரவாலாக்களுக்குச் சற்றே விலை குறைவு.

**என்னாத்த போராட்டம் பண்ணி என்னாத்த வெற்றி பெற்று…**

படங்களைச் சீராக, வரிசைப்படிதான் வெளியிடுவோம் என்றார்கள். ஆனால் பொறுப்பில் இருப்பவர்களின் படங்களுக்கு மட்டும் முன்னமே டேட் போட்டு ப்ளாக் செய்ய ஆரம்பித்தவுடன் கேள்வி வர ஆரம்பித்துவிட்டபடியால், பழையபடி கேரள வெள்ளம் போல வாரத்துக்கு மீண்டும் பத்துப் படங்கள் வர ஆர்மபித்துவிட்டன. கேட்டால் நாங்கள் மட்டுமே சங்கம் அல்ல, கில்ட்கூட இருக்கிறது. அவர்கள் ஒத்துவரவில்லை என்று ஒரு பேட்டி.

ஆன்லைனில் டிக்கெட் விலையை வரையறுக்கச் செய்வோம் என்று சூளுரைத்தார்கள். மே அல்லது ஜூன் மாதத்துக்குள் எல்லா தியேட்டரும் ஆன்லைனில் டிக்கெட் விற்பனையைத் தெரிந்துகொள்ளக்கூடிய அளவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்கள். அதற்கு இதுவரை பதிலே காணோம். ஆனானப்பட்ட சத்யம் தன் திரையரங்குகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனையைத் தன்னுடைய சொந்த சர்வரிலிருந்து புக் மை ஷோ சர்வருக்கு மாற்ற சில நாட்கள் மட்டுமே ஆனது எனும்போது இவர்கள் சர்வர் வைத்து அனைத்து தியேட்டர்களின் சீட் ஜியாகிராபியை செட் செய்ய எத்தனை நாள் ஆகப் போகிறது?

இதையெல்லாம் செய்தால் டிக்கெட் டகால்டி வேலைகளில் ஆரம்பித்து, டிக்கெட்டுக்கு 15 ரூபாய்க்கு மேல் வரும் வருமானம் போய்விடும். என்கிறபோது எப்படி அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்? படம் பார்க்கிறவன்தான் இளிச்சவாயன்.

இப்படி, சொன்ன எல்லா உறுதிமொழிகளையும் தவிடு பொடியாக்கிவிட்டு, தன் பாட்டுக்கும் நடந்துகொண்டிருக்கிறது சங்கம். பின் எதற்காக? யாரை மிரட்ட இந்தப் போராட்டம் நடைபெற்றது? பைரஸி எடுத்த தியேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் வெறும் அறிவிப்பாக இந்த தியேட்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதீர்கள் என்ற கோரிக்கையை மட்டுமே முன்வைத்திருக்கிறது சங்கம். ஏன் அவர்கள் தியேட்டர்களுக்கு எதிராய் கடும் நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை?

உண்மையில் சொல்லப்போனால் இந்தப் போராட்டம் கிட்டத்தட்ட பெரும் ஆதிக்க சக்தியாய் மாறிவரும் தியேட்டர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் எதிராய் ஆரம்பித்த போராட்டமாகத்தான் இருந்தது. அதை வெளியே சொல்லாமல் டிஜிட்டல் அது இது என உட்டாலக்கடியாய் வேலை செய்தாலும் எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. அதாவது, சொன்னதும் நடக்கவில்லை. சொல்லாமல் மறைத்த நோக்கமும் நிறைவேறவில்லை. இன்றுவரை தியேட்டர்காரர்கள் சொன்னதற்குத்தான் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்களே தவிர வேறு ஏதும் நடக்கவில்லை.

உணவு விலை குறைப்பு, பார்க்கிங் டிக்கெட் விலை குறைப்பு, ஆன்லைன் டிக்கெட் விலை குறைப்பு, டிஜிட்டல் விலை குறைப்பு என எல்லாமே வெறும் தேர்தல் அறிக்கையாய் மட்டுமே இருக்கின்றன.

இதோ புதிதாய் ஆரம்பித்த காசி டாக்கீஸ் குரூப் உள்பட எல்லா மல்ட்டிப்ளெக்ஸும் தங்களுடய அடிப்படை விலையாய் 120 + வரி என வைத்துக்கொண்டு மீடியம் மற்றும் சிறு படங்களுக்கு விலை வைத்தும் பெரிய படங்களுக்கு 150 + வரி என நிர்ணயித்திருக்கின்றன. யாரையும் யாரும் கேட்டு முடிவெடுக்கும் சூழ்நிலை இங்கே நிலவவில்லை என்பது வெளிப்படையாய்த் தெரிகிறது.

இப்படி எல்லாரும் தான்தோன்றித்தனமாய் இயங்கிக்கொண்டிருந்தால் எதற்குச் சங்கம்? எதற்குப் போராட்டம்? இடையில் மாட்டிக்கொண்டு அல்லாடும் சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்கள்தான் இதற்கெல்லாம் களபலியா?

(**கட்டுரையாளர்:** கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். மின்னம்பலம் பதிப்பகம் சார்பாக இவருடைய ‘கனவைத் துரத்துதல்’ நூல் வெளியாகியுள்ளது. இவரைத் தொடர்புகொள்ள: sankara4@gmail.com)

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share