hசாலையில் வீசப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய்!

Published On:

| By Balaji

சென்னை கோட்டூர்புரத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தைச் சாலையில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

நேற்று (மே 27) நள்ளிரவில் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் வரதாபுரம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, லாக் தெருவில் ஒரு வாலிபர் அதிவேகமாக பைக்கில் சென்றார். சந்தேகத்துக்கு இடமான வகையில் அவரது நடவடிக்கை இருந்ததால், பைக்கை நிறுத்த முயற்சித்தனர் போலீசார். ஆனால், அந்த நபரின் பைக்கில் இருந்து 3 பைகள் கீழே விழுந்தன. அவர் தப்பிச் சென்றுவிட்டார். ஜீப்பை நிறுத்தி அந்த பைகளை சோதனையிட்டனர் போலீசார். அதில் ரூபாய் நோட்டுகள் கத்தையாக இருந்தன. அதோடு தங்க வளையல்களும் இருந்தன.

கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டது. அந்த பையில் 1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. தலைமறைவான நபரின் பைக் எண்ணை வைத்து, அவரைத் தேடும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த நபர் வேகமாகச் செல்லும்போது பைகள் கீழே விழுந்தனவா அல்லது அந்த நபர் பைகளை வீசிச் சென்றாரா என்பதில் சந்தேகம் இருந்து வருகிறது. அந்த பணம் திருட்டுப் பணம் அல்லது ஹவாலா பணமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது. இது பற்றி வருமான வரித் துறையினரும் விசாரணை நடத்தி வருவதால், விரைவில் இது யாருடைய பணம் என்று தெரியவரும். சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் தலைமையிலான போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)

**

.

**

[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)

**

.

.

**

[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share