மே மாதத்துக்கான சம்பளம் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
பொதுத் துறை தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பின்னர் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அரசு தரப்பிலிருந்து உதவிகள் வழங்கப்பட்டு வந்தாலும் சந்தையில் நிலவும் கடுமையான போட்டியால் அந்நிறுவனம் போதிய வருவாய் ஈட்ட முடியாமல் தவித்து வருகிறது. பிப்ரவரி மாதத்திலிருந்தே அதன் ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்காமல் பிஎஸ்என்எல் நிறுவனம் தாமதித்து வந்தது. ஊழியர்கள் தரப்பிலிருந்து வேலைநிறுத்தப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
அதன் பின்னர் சரியான சமயத்தில் சம்பளம் வழங்கப்படும் என்று நிறுவனம் தரப்பிலிருந்து உறுதியளிக்கப்பட்டது. மேலும், நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் ரூ.1,500 கோடி கடன் பெற ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் மே மாதத்துக்கான சம்பளம் சரியான சமயத்தில் வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வங்கிகளிடம் ரூ.3,500 கோடி வரையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் கடன் பெற அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)
**
.
**
[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)
**
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா](https://minnambalam.com/k/2019/05/27/18)
**
.
.
�,”