hகிளாஸிக்கல் டான்ஸர் டூ கபடி வீராங்கனை!

Published On:

| By Balaji

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் கென்னடி கிளப் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார் மீனாட்சி.

கென்னடி கிளப்பில் இணைந்த பின்னணி குறித்து பேசியுள்ள மீனாட்சி, “என் நண்பரின் மேனேஜர் சுசீந்திரன் சாரை சந்திக்க சொல்லியிருந்தார். நாங்கள் ஒரு காபி ஷாப்பில் சந்தித்தோம். நான் ஏதேனும் விளையாட்டில் பயிற்சி பெற்றிருக்கிறேனா என்று கேட்டார். பள்ளிக் காலங்களின் போது விளையாடியுள்ளேன் என்றேன். அப்போது அவர் இது கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் படம். கற்றுக்கொள்ளுங்கள் என்றுமட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன்பின் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு மாதம் கழித்து அவரது மேனேஜர் அழைத்தார். அடுத்த நாள் பூஜை இருப்பதாகவும் அத்துடன் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் தெரிவித்தார். ஏழு நாள்கள் நடைபெற்ற படப்பிடிப்புக்கு பின் கபடி வீராங்கனைகளால் எனக்கு பயிற்சியளிக்கப்பட்டது” என்று கூறினார்.

மேலும் அவர், “என்னைத் தவிர படத்தில் நடிக்கும் மற்ற நடிகைகள் நிஜ கபடி வீராங்கனைகள். தமிழ்நாடு அணிக்காக விளையாடுபவர்கள். நான் அவர்களிடம் ஒரு மாத காலம் பயிற்சி பெற்றேன்” என்று கூறினார்.

குடும்பத்தினர் குறித்து கூறிய மீனாட்சி, “நான் நடிகையாக செல்வதில் என் குடும்பத்தினருக்கு உடன்பாடில்லை. நான் கிளாசிக்கல் டான்ஸர். ஆனால் இந்த வாய்ப்பு வந்தபோது அவர்கள் உடனே சம்மதித்தார்கள். நடிப்பதற்கு சவாலான பாத்திரமாகவும் இது உள்ளது”

சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share