hகிச்சன் கீர்த்தனா: லெமன் பெப்பர் பனீர்

Published On:

| By Balaji

இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பனீர்.

இன்றைய நாகரிக உலகில் பனீர் பெரும்பாலானவர்களின் இல்லங்களைச் சென்றடைந்துவிட்டது. புரதச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ள பனீரில் லெமன் பெப்பர் பனீரை செய்து, வீட்டிலுள்ளவர்களின் பலத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துங்கள்.

**என்ன தேவை?**

பனீர் – 200 கிராம்

எலுமிச்சைப்பழம் – 2 (சாறு பிழியவும்)

மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்

மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் – அரை டீஸ்பூன்

வெண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.

**எப்படிச் செய்வது?**

பனீரை பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதில் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தவாவில் வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, ஊறிய பனீரை இருபக்கமும் நன்கு பொரித்தெடுக்கவும். லெமன் பெப்பர் பனீர் தயார்.

[நேற்றைய ரெசிப்பி: கோவைக்காய் வறுவல்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/13/4)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share