காசி டாக்கீஸ் பெயரை பயன்படுத்தலாம் என்று அத்திரையரங்க நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
1958ஆம் ஆண்டில் ஜாபர்கான்பேட்டையில் காசி நாடார் 23.40 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இந்நிலத்தில் குடியிருப்புகள், வளாகங்கள் என பல கட்டடங்களை அவர் கட்டமைத்தார். காசி நாடார் இறந்தபின் அவரது நினைவாக அவர்
மகன் 1984ஆம் ஆண்டில் காசி திரையரங்கை துவங்கினார், பின்னர் இத்திரையரங்கை 2002ஆம் ஆண்டில் பால்சன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்தார். அதைத்தொடர்ந்து காசி திரையரங்கின் பெயரை மாற்றவேண்டும் என்று பால்சன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் பலமுறை அறிவுறுத்தியுள்ளார். ஆனால் காசி திரையரங்கின் பெயரை வர்த்தகச்சின்னமாக பதிவு செய்துவிட்டது பால்சன் எண்டர்பிரைசஸ் நிறுவனம்.
இதன்பின் காசி திரையரங்கின் பின்புறம் உள்ள சாலையில் காசி டாக்கீஸ் என்ற புதிய திரையரங்கம் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்டது. காசி டாக்கீஸ் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி காசி திரையரங்க நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. கடந்த எட்டு மாதங்களாக விசாரணையில் இருந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, காசி டாக்கீஸ் என்ற பெயரை புதிய திரையரங்கம் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும், வழக்கு மேல்முறையீட்டுக்கு போகும்போது காசி டாக்கீஸ் உரிமையாளர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் அப்பெயரை நிரந்தரமாக பயன்படுத்த முடியும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[தண்ணீர் தட்டுப்பாடு: ஓட்டல்களில் மதிய உணவை நிறுத்த முடிவு!](https://minnambalam.com/k/2019/06/14/41)**
�,”