hஒரே சிறையில் நீரவ் மோடி – விஜய் மல்லையா?

Published On:

| By Balaji

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளான விஜய் மல்லையாவும் நீரவ் மோடியும் இந்தியாவுக்கு நாடுகடத்தி வரப்பட்டபிறகு மும்பையில் உள்ள ஒரே சிறையில் அடைக்கப்படவுள்ளார்கள்.

கிங்ஃபிஷர் நிறுவனர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளிடம் ரூ.9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டே தப்பியோடியவர். போலியான ஆவணங்களைக் கொண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,700 கோடிக்கு மேல் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டே ஓடியவர் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி. இவர்கள் இருவருமே இங்கிலாந்தின் தலைநகரம் லண்டனில் வசித்து வருகின்றனர்.

இவ்விருவருமே அங்கு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், விஜய் மல்லையா பெயிலில் வெளியே வந்துவிட்டார். நீரவ் மோடி தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் சிறையில் இருக்கிறார். அவரது ஜாமீன் கோரிக்கை மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அதிவிரைவில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படவிருக்கும் நிலையில், மும்பை ஆர்தர் ரோடு பராக் 12 சிறைச்சாலையில் இவர்கள் அடைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மல்லையா அச்சிறையில் அடைக்கப்படுவது ஏற்கெனவே உறுதியாகியிருந்தது.

நீரவ் மோடி அடைக்கப்படும் சிறை அறையில் அவருடன் மூன்று மற்ற கைதிகள் இருப்பார்கள் என்று சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது பராக் சிறையின் இரண்டு அறைகளில் ஒன்று காலியாகவும், ஒரு அறையில் மூன்று கைதிகளும் இருக்கின்றனர். இந்த விவரங்களை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)**

**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share