Hஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

public

யாரை எதிர்க்க வேண்டும்?

கூட்டு விவசாய முறையை ஒழித்து ஒற்றைச் சுயநல விவசாய முறையைப் பரப்பியதன் விளைவாக, இன்று ஒற்றை உயிரினக் கூட்டங்களால் விவசாய நிலங்கள் அழிந்துவருகின்றன. குறிப்பாக, விவசாய நிலங்களில் மயில்களின் எண்ணிக்கை கணக்கு வழக்கு இல்லாமல் பெருகி வருகிறது. அதன் எண்ணிக்கை எந்த அளவிற்கு இருக்கிறதென்றால், ஓர் அரசியல்வாதி, மயில்களை விரட்ட சரணாலயம் அமைத்துத் தருகிறேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குறுதி தந்தார். அந்த அளவிற்கு வயல்களில் மயில்களின் அட்டகாசம் அதிகரித்திருக்கிறது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 30,000 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் மேட்டுப்பாங்கான மானாவாரி நிலங்கள். இந்நிலங்களில் நிலக்கடலை, சோளம், கம்பு போன்ற தானியங்களும் தக்காளி, மிளகாய், கத்திரி போன்ற காய்கறிகளும் நீர்நிலைப் பாசனம் மூலம் விளைவிக்கப்படுகின்றன.

மயில்கள் இந்தப் பயிர்களைச் சுத்தமாக நாசம் செய்துவிடுகின்றன. நீர் மேலாண்மை, பூச்சி மேலாண்மை என்று அனைத்தையும் மேலாண்மை செய்து பயிர்களை வளர்த்துவந்தாலும் பால் கட்டும் நேரத்தில் வந்து பயிர்களைப் பாழ்படுத்திவிடுகிறன மயில்கள்.

கடந்த ஐந்து வருடங்களாக இந்தப் பகுதியில் மயில்களின் தாக்குதல் இருக்கிறது. மக்களவைத் தேர்தலின்போது இங்கே ஓட்டுக் கேட்டு வந்த தற்போதைய கரூர் எம்.பி. மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் இந்த மயில்கள் பிரச்சினையைக் கட்டுப்படுத்தக் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது. அருகில் இருக்கும் ரங்கமலையில் மயிலுக்குச் சரணாலயம் அமைத்து, அத்தனை மயில்களையும் அங்கே கொண்டு போக ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால், இன்றுவரை எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அதனால் அடுத்த தேர்தலில் அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று மக்கள் கூறுகின்றனர்.

உண்மையில் அவர்கள் தோற்கடிக்க வேண்டியது எம்.பி.க்களை அல்ல; பசுமைப் புரட்சியை. அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியது மயில்களை அல்ல; நவீன விவசாயத்தை.

**- நரேஷ்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *