Hஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

Published On:

| By Balaji

பாகிஸ்தான் காற்று இந்தியர்களின் நுரையீரலையும் நிரப்பும்!

பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி என்று இந்தியாவின் பெரும்பாலான குழந்தைகள் நினைக்கின்றன. இதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. உள்துறை மற்றும் ராணுவ அமைச்சர்களின் அறிக்கைகளை அவர்கள் வாசிக்கத் தேவையில்லை. காஷ்மீர் பிரச்சினையைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கத் தேவையில்லை. வெறும் கிரிக்கெட் போட்டிகள் போதும். தமிழ்த் திரைப்படங்கள் போதும். தீவிரவாதிகள் என்றாலே பாகிஸ்தானிலிருந்து வருபவர்கள்தான் எனும் கதைசொல்லிகள் போதும்.

இப்படிப்பட்ட ஒரு நிலம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு மிகப் பெரிய பாடம் கற்பித்துள்ளது.

பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது, 1947இல்தான் பிரிந்தது என்று ஒரு குழந்தைக்குப் புரியவைப்பது மிகக்கடினம். ஆனால், அந்நாடு இந்தக் குழந்தைகளுக்காக எடுத்த ஒரு முன்னெடுப்பு, ஒட்டுமொத்த உலகிற்கும் ஓர் எடுத்துக்காட்டு.

வறண்ட பூமியைப் பசுமைக் காடுகளாக மாற்றியிருக்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான ஹெரோஷாவின் வறண்ட நிலப்பரப்புகளில் மில்லியன்கணக்கான மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டுவருகின்றன. காடுகளை அழிப்பதற்கு எதிரான போராட்டம் வெற்று கோஷங்களாக இருப்பதை அவர்கள் ஏற்கவில்லை. போராட்டத்திற்குச் செயல் வடிவம் கொடுத்தனர் அப்பகுதி மக்கள். காடுகளை அழிப்பதற்கு எதிராகப் போராட ஒரு காட்டையே உருவாக்கிவருகின்றனர். ஹெரோஷா பகுதியில் 2015 முதல் 2016க்குள் 16,000 தொழிலாளர்கள் 9,00,000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கப்படும் முன்னெடுப்பின் முன்மாதிரிகள் இவை. வேகமாக வளரக்கூடியதும், வணிகப் பயன்பாட்டிலும் முக்கியத்துவம் வகிப்பதுமான யூகலிப்டஸ் வகை மரங்களையே அதிகமாக நடவு செய்துள்ளனர்.

காடுகளை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், தங்களின் பொருளாதாரத் தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறு செயல்பாட்டை மாற்றுவது மட்டுமல்லாமல், இப்படியொரு பசுமைக் காட்டை உருவாக்கியதன் மூலம் தற்போதைய குழந்தைகளின் எதிர்கால உலகிற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளார்கள் பாகிஸ்தானியர்கள்.

நமக்கும் பாகிஸ்தானிற்கும் நடுவில் இருப்பது பகையோ எதிரி யுத்தமோ அல்ல. வெறும் கோடுகள் மட்டுமே. அந்தப் பசுமைக் காடுகளிலிருந்து வரும் காற்று நிச்சயமாக இந்தியக் குழந்தைகளின் நுரையீரலையும் நிரப்பும்.

**-நரேஷ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel