hஐபிஎல் கிரிக்கெட்: டாப் ஐந்து வீரர்கள்

public

ஐபில் போட்டிகள் இன்றிலிருந்து தொடங்குகின்றன. கிரிக்கெட் ரசிகர்களின் 50 நாட்களின் மாலை நேரத்தை, முழுமையாகக் கட்டிப்போடப்போகும் இந்தத் தொடரின் அதிகபட்சத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் குறித்த ஒரு சின்ன ‘பயோ’. முதல் ஐந்துபேரும் இந்திய அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறாவதாக, மேற்கிந்தியத் தீவின் போலார்ட் உள்ளார். ஆனால் அவர், அந்த நாட்டின் 20 ஓவர் அணியில் இல்லை என்பது நகைமுரண்.

விராத் கோலி – இந்த ஐபிஎல்-லில் அதிகம் சோபிப்பார் என பெரும்பாலானோர் எதிர்பார்க்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனான விராத் கோலிதான் அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர். 15 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டிருக்கும் கோலியின் ஐபிஎல் ஆவரேஜ் 32.67தான். இவருக்கு அடுத்த இடத்தில் அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கும் ஷிகர் தவானைவிட குறைவான ஆவரேஜ் வைத்திருந்தாலும், எவ்வளவு நெருக்கடியான நிலையிலும் விளையாடும் திறன்தான் இவரின் மதிப்பாக மாறியுள்ளது.

ஷிகர் தவான் – டெல்லி டேர் டெவில்ஸில் ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கிய தவான், அதிரடிக்குப் பெயர்பெற்றவர். பின்னர், மும்பை இண்டியன்ஸில் இரண்டுமுறை விளையாடிய தவான், 2013 முதல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடிவருகிறார். ஃபார்மில் இல்லை என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில்கூட தனது அணியின் கேப்டனை சன் ரைசர்ஸ் விட்டுகொடுக்க விரும்பவில்லை. அதனால் எழுந்த போட்டியில் ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு, இந்திய அளவில் இரண்டாம் இடத்துக்குச் சென்றுள்ளார் தவான்.

எம்.எஸ்.தோனி – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக, தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக இருந்த தோனி ஐ.பி.எல்-லில் முதன்முறையாக அணி மாறியுள்ளார். புனே அணியின் கேப்டனாகியுள்ள தோனி, புதிய அணியுடன் களமிறங்கியுள்ளார். தோனியின் விளையாட்டுத் திறன் சொல்லத் தேவையேயில்லை. அவரின் அனுபவமும், அதிரடியும் அதிகம் வெளிப்படும் எனத் தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், டி-20 போட்டியின்போது ‘எப்போது ஓய்வு’ என்று கேட்ட செய்தியாளரின் வாயிலிருந்தே, தான் ஃபிட்டாக இருப்பதாகச் சொல்லவைத்தார். அவரைப் பொறுத்தவரை, இன்னும் நான்கைந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல்-லில் ஆடவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால், அதிக ‘ஹெலிகாப்டர்கள்’ பறக்கும் என நம்பலாம். இவரும், ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மா – பல லட்சம் கோடி சொத்து வைத்திருக்கும் முகேஷ் அம்பானி, இவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிக அதிகம். 34.55 ஆவரேஜ் வைத்திருக்கும் ரோஹித், மிஸ்டர்.கூல் என்றே சொல்லலாம். மும்பை இண்டியன்ஸின் கோச் ரிக்கி பாண்டிங்குக்குப் பிடித்த வீரரான ரோஹித் சர்மா, ரூ.11.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். தற்போது, கோப்பையைக் கையில் வைத்திருக்கும் அணியின் பெருமைமிகு கேப்டனான ரோஹித், இந்த ஆண்டும் வெடி வெடிப்பாரா? என்பதைப் பார்க்க வேண்டும்.

கௌதம் காம்பீர் – கடந்த ஐபிஎல்-லில் விளையாடாத நிலையிலும், காம்பீர் ரூ.10 கோடிக்கு ஏலம் போயிருக்கிறார். டெஸ்ட் அணியில் விளையாடும் வீரர்களில் அதிக ஆவரேஜ் வைத்திருக்கும் வீரர். கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் கேப்டனான காம்பீர், இந்தமுறை தனது அணியை சரியானதிசையில் பயணிக்க வைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக விளையாடிய ஐபிஎல்-லில் மிகக் குறைந்த ஆவரேஜிலிருந்த காம்பீர், தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *