Hஇன்று இறுதிக்கட்ட தேர்தல்!

Published On:

| By Balaji

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட தேர்தல் இன்று நாடு முழுவதும் 59 தொகுதிகளில் நடைபெறவிருக்கிறது. அதனுடன், தமிழகத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. முதற்கட்ட வாக்குப்பதிவில் 69.50%, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 69.44%, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் 68.40%,நான்காம் கட்ட வாக்குப்பதிவில் 65.51%, ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் 63.50%, ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் 63.49% வாக்குகளும் பதிவாகின. இந்த நிலையில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

பிகார் மாநிலத்தில் எட்டு தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் மூன்று தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் எட்டு தொகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் ஒன்பது தொகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகளிலும், இமாசல பிரதேசத்தில் நான்கு தொகுதிகளிலும், சண்டிகர் உள்ளிட்ட 59 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியிலும் இன்று தேர்தல் நடைபெறவிருக்கிறது

காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் தேர்தலில் சுமார் 10.01 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1 லட்சத்து 12 ஆயிரத்து 986 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு 59 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான தொகுதிகளில் ஐந்தடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சத்ருகன் சின்கா, ரவிசங்கர் பிரசாத், நிஷா பாரதி, பவன்குமார் பன்சால், சன்னி தியோல் ஆகியோர் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே 483 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவுபெறுகிறது. எனினும், பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வேலூர் தொகுதிக்கு மட்டும் மற்றொரு தேதியில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share