Hஇந்தியாவின் ஜிடிபி உயரும்!

Published On:

| By Balaji

2020 முதல் 2022ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தோராயமாக 7.3 சதவிகித வளர்ச்சியடையும் என்று மோர்கன் ஸ்டான்லி ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘இந்தியாவின் ஒட்டுமொத்த கொள்கைகள் உற்பத்தியை அதிகரிக்கும். இது பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ள உதவும். 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் ஏற்பட்ட மந்த நிலையிலிருந்து இந்தியப் பொருளாதாரம் 2018ஆம் ஆண்டில் மீண்டு வரும்.

தனியார் நிறுவனங்களில் முதலீடுகள் 2018ஆம் ஆண்டில் அதிகரிக்கத் தொடங்கும். வலுவான பொருளாதார அமைப்பு முதலீட்டுக் கடன் தேவையை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக 2018ஆம் ஆண்டில் பொருளாதாரம் மீண்டுவரும். 2017ஆம் ஆண்டில் உண்மையான ஜிடிபி 6.4 சதவிகிதமாக இருந்தது. இது 2018ஆம் ஆண்டில் 7.5 சதவிகிதமாக அதிகரிக்கும். 2019ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி மேலும் அதிகரித்து 7.7 சதவிகிதமாக உயரும்.’

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் தற்போது தொழிற்துறை மெதுவாக மீண்டுவருவதால் உள்நாட்டு உற்பத்தி 2018ஆம் நிதியாண்டில் அதிகரிக்கும் என மோர்கன் ஸ்டான்லியைப் போன்று தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் உற்பத்தித் துறை 17 மாதங்களுக்குப் பிறகு சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment