Hஆக்சன் கிங்கின் 150 வது படம் !

Published On:

| By Balaji

ஆக்சன் கிங் அர்ஜுன் கன்னட மொழி படங்களில் இருந்து தமிழுக்கு ராம நாராயணனின் ‘நன்றி’ படம் மூலம் அறிமுகமானார். ‘ஜென்டில்மேன்’ ,’ஜெய்ஹிந்த்’, ‘முதல்வன்’ என்று தமிழில் முக்கியமான ஹிட் படங்களில் நடித்துள்ள திறமையான நடிகர். சண்டைக்காட்சிகளில் தனக்கென ஒரு ஸ்டைலை இன்றளவும் பின்பற்றி வருபவர். அவர் நடித்து நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளிவர இருக்கும் ‘நிபுணன்’ படம் ‘ஆக்சன் கிங்’ அர்ஜுனுக்கு 150-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. `நிபுணன்’ என்பது படத்தின் கதாநாயகனான அர்ஜுனைத் தான் குறிப்பிடுகிறதாம்.கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில், அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உண்மைகளை கண்டறியும் கதாநாயகனின் கதை `நிபுணன்’. இப்படத்தில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் என நட்சத்திர பட்டாளாமே நடித்துள்ளது.

ஹாலிவுட் படங்களை பார்த்து அவர்களது கதை அம்சத்தை பாராட்டி, அவர்களின் தயாரிப்பு திறனை பாராட்டும் ஒரு சராசரி ரசிகனின் தேவையை `நிபுணன்’ படம் பூர்த்தி செய்யும் என்று படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளர்களுள் ஒருவருமான அருண் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நிபுணன் படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்களாம். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில், நவீனின் இசை அமைப்பில், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பில் இந்த படம் தயாராகியுள்ளது.

இந்தப் படத்தின் டீசரை வருகின்ற மே 15-ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share