டெங்கு காய்ச்சல் விவகாரத்தை தமிழக அரசு மூடி மறைக்கிறது என்றும், வெறும் 40 பேர்தான் இறந்துள்ளனர் என்ற பொய்யான தகவலைப் பரப்புகிறது என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவிவருகிறது. அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவதாகக் கூறினாலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன. டெங்கு காய்ச்சலுக்கு தினந்தோறும் 10பேர் இறந்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் 400 மேற்பட்டோர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், 40 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசு தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் டெங்கு பாதிப்புகள் குறித்து இன்று (அக்டோபர் 13) விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்,தமிழகத்தில் டெங்கு விவகாரத்தை அரசு மூடி மறைத்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு 200 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், வெறும் 40 பேர் மட்டுமே இறந்துள்ளதாகவும், 30,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 11 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகத் தவறான தகவலைப் பரப்புகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் டெங்கு காய்ச்சலை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியாது, மாறாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே கூடும்” என்று தெரிவித்துள்ளார்.�,”