Hஅதிமுக தலைவராகிறாரா ரஜினி?

Published On:

| By Balaji

“அதிமுகவுக்குப் புதிய தலைமைக்கான அவசியம் ஒருகாலத்திலும் ஏற்படாது” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்காத ரஜினி, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் சில அம்சங்களை வரவேற்றிருந்தார். ஆனால், ரஜினிகாந்த் மத்திய, மாநில அரசுகளின் குரலாகவே ஒலிக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த நிலையில் சென்னையில் நேற்று (ஜூலை 14) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், அதிமுக தலைவராக நடிகர் ரஜினிகாந்தை ஆக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “தங்களது கற்பனைக்கு ஏற்றார்போல ஒவ்வொருவரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதிமுக என்பது ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்டுள்ள மாபெரும் இயக்கம். ஜெயலலிதா சொன்னது போல அவருக்குப் பிறகு நூறாண்டுகள் வரை கட்சியும் ஆட்சியும் இருக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவினர் எண்ணம். அதனடிப்படையில் அதிமுகவினர் ஒற்றுமையாகச் செயல்பட்டு வரும் நிலையில் அதற்கான அவசியம் எங்களுக்கு ஒரு காலத்திலும் ஏற்படாது” என்று மறுப்பு தெரிவித்தார் ஜெயக்குமார்.

வேலூர் தேர்தலில் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே என்னும் கேள்விக்கு, “யூகங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஏ.சி.சண்முகத்துக்குத் தேர்தல் பணியாற்றி நிச்சயம் வெற்றிபெற வைப்போம். ரஜினி ஆதரவு தெரிவிக்கிறார் என்பது அதிகாரபூர்வமற்ற தகவல்தான்” என்று பதிலளித்தார்.

மேலும் வேலூர் திமுகவுக்கு வெற்றிக் கோட்டை அல்ல. அது வெற்றுக் கோட்டையாகத்தான் அமையும் என்றும் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share