தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் நடிகை அதிதி ராவ், படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமானார்.
நடிகை அதிதி ராவ் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்குப் பட ஷூட்டிங்கில் உலோகத்தாலான ஆடை ஒன்றை அணிந்து நடித்துள்ளார். படத்தின் கதைக்கேற்றார்போல் ஒரு காட்சிக்காக பிரத்யேமாக ஓர் ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஆடையை அணிந்து அதிதி நடித்த போது தவறி கீழே விழுந்து, அவரது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. அதோடு உடலில் சிராய்ப்புகளும், சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்த விபத்தைப் பொருட்படுத்தாமல் ஷூட்டிங் பாதிக்கப்பட வேண்டாம் எனக் கூறி தான் சம்பந்தப்பட்ட அந்த குறிப்பிட்ட காட்சியைச் சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார் அதிதி. இன்னும் பெயரிடப்படாத இந்தத் தெலுங்குப் படத்தை சங்கல்ப் ரெட்டி இயக்குகிறார். தற்போது இன்னொரு தெலுங்குப் படமான சம்மோஹனம் மற்றும் மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் அதிதி ராவ்.�,