iஜிஎஸ்டி: தீபாவளியை நம்பும் மத்திய அரசு!

Published On:

| By Balaji

2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரியின் மூலம் வரிகளை ஒருமுகப்படுத்தி மத்திய அரசு வரி வசூலித்துவருகிறது. பல மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது.

இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி வசூல் தொகை கடந்த 19 மாதங்களிலேயே மிகக்குறைவாக சென்ற செப்டம்பர் மாதம் வசூலாகி இருப்பதாக அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்குக் கிடைத்த வரி வசூல் 98,202 கோடி ரூபாய். ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 91,916 கோடியாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

இதில் மத்திய அரசுக்கான ஜிஎஸ்டி 16,630 கோடி ரூபாயாகவும் மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி 22,698 கோடி ரூபாயாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இலக்குகளின்படி மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு மாதத்துக்கு ஒரு ட்ரில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், வரி வசூல் சென்ற செப்டம்பரில் குறைந்ததை அடுத்து பொருளாதார வளர்ச்சியிலும் இது கடுமையாக எதிரொலிக்கும் என்கிறார்கள் வர்த்தக வல்லுநர்கள்.

அதேநேரம் இன்னொரு பக்கம் நம்பிக்கைக் குரலும் எழுகிறது. “அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த கார்ப்பரேட் வரிகளில் பெருமளவிலான குறைப்பும் ஜிஎஸ்டி வரி வசூலில் இலக்கை அடைவதற்கான முயற்சிகளில் சிறிது தொய்வை ஏற்படுத்தி இருக்கக் கூடும் அக்டோபர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்திற்கான வர்த்தகம் இந்தியா முழுவதும் அதிகளவில் நடைபெறும் என்பதால் ஜிஎஸ்டி வரி வசூல் உயர வாய்ப்பிருக்கிறது” என்று மத்திய அரசுத் தரப்பில் நம்பிக்கையாகக் கூறுகிறார்கள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share