ஆறாவது மாதமாக ரூ.1 லட்சம் கோடியைக் கடந்த ஜிஎஸ்டி வரி வசூல்!
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியிலும் ஜிஎஸ்டி என்னும் சரக்கு, சேவைகள் வரி வசூல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து ஆறாவது மாதமாக டிசம்பரிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிடக் கடந்த டிசம்பரில் வருவாய் 13 சதவிகிதம் அதிகமாகும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.1 லட்சத்து 29,780 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.22, 578 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.28, 658 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.69, 155 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.9,389 கோடி கிடைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வசூலான 1 லட்சத்து 39,708 ரூபாயே ஜிஎஸ்டி வரி வசூலில் அதிகபட்ச தொகையாகும்.
**-ராஜ்**
.�,