அழகப்பா பல்கலை துணைவேந்தர் : புதிய தேடல் குழு அமைக்க உத்தரவு!
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழு பரிந்துரை செய்த மூன்று பேரையும் நிராகரித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , புதிய தேடல் குழுவை நியமிக்க பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதிலிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களில் தேடல் குழு 3 பேரை துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரை செய்தது. அந்த 3 பேரிடம் நேர்காணல் நடத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேரும் தகுதியானவர்கள் இல்லை என்று அப்பல்கலைக்கழக பதிவாளருக்கு ஆளுநரின் செயலாளர் மூலம் கடிதம் அனுப்பினார்.
அக்கடிதத்தில், ஏற்கனவே அமைக்கப்பட்ட தேடல் குழுவுக்கு பதிலாக புதிய தேடல் குழுவை அமைத்து, மீண்டும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்களைப் பெற்று தகுதியான 3 பேரை பரிந்துரை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,