2020 வரை கூகுள், ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு வீட்டிலேயே வேலை!

public

N

கூகுள், ஃபேஸ்புக் ஊழியர்கள் 2020 ஆண்டு முழுக்க வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று அந்நிறுவனங்கள் அனுமதியளித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மிக அதிக அளவு பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள்.

கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களும் ஜூன் மாதம் வரை தங்கள் ஊழியர்களை வீடுகளிலிருந்து பணியாற்ற அனுமதித்தன. ஆனாலும் அங்கு கொரோனாவின் தாக்கம் குறையவில்லை.

இதையடுத்து, பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை இந்த ஆண்டு முழுவதும் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதிவரை தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்கப் போவதாக அதிகாரபூர்வமாக உறுதிபடுத்தியுள்ளன.

ஃபேஸ்புக் நிறுவனம் ஜூலை 6ஆம் தேதி, நிறுவனத்தைத் திறக்க உத்தேசித்திருந்தது. ஆனால், பணியாளர்கள் விரும்பும்பட்சத்தில் இந்த ஆண்டு இறுதிவரை அவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என அறிவித்துள்ளது.

ஜூன் 1ஆம் தேதி வரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுமாறு கூகுள் நிறுவனம் கூறியிருந்தது. தற்போது பணியாளர்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.